TNPSC Training

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் "குரூப் 4' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும்,"குரூப் 4' தேர்வில் பங்கேற்பவர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இலவச சிறப்பு பயிற்சி அளிக்கிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கு மனுச்செய்துள்ள மனுதாரர்களுக்கு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக, தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்க விருப்பமுள்ள நபர்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரம் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோக்களுடன் ஜூலை 19ம் தேதிக்குள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
பயிற்சி வகுப்பு ஜூலை 22 முதல் ஆக., 7 வரை மாலை 3.00 மணி முதல் 6,00 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகுதியான மனுதாரர்கள் இப்பயிற்சியில் பங்கேற்று பயனடையலாம் என்று கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

ESIC - SSO 2018 RECRUITMENT

EMPLOYEE STATE INSURANCE CORPORATION RECRUITMENT OF SOCIAL SECURITY OFFICER / MANAGER GRADE-II / SUPERINTENDENT IN ESI CORPORATION ...