TNPSC TITBITS

உலக மகளிர் மாநாடு:

1. முதலாவது உலக பெண்கள் மாநாடு 1975-ஆம் ஆண்டு பெக்சிகோ நகரில் நடைபெற்றது.

2. இரண்டாவது உலக மகளிர் மாநாடு 1980-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டிலுள்ள கோபென்ஹேகன் நகரில் நடைபெற்றது.

3. மூன்றாவது உலக மகளிர் மாநாடு 1985-ஆம் ஆண்டு கென்யாவிலுள்ள நைரோபியில் நடைபெற்றது.

4. 1995-ஆம் ஆண்டு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நான்காவது உலக மகளிர் மாநாடு நடைபெற்றது.

5. ஐந்தாவது உலக மகளிர் மாநாடு 2015-இல் நடைபெறவுள்ளது.

6. மார்ச் 8 – சர்வதேச பெண்கள் தினம்.

7. 1978 – சர்வதேச பெண்கள் ஆண்டு (ஐ.நா.சபை)



________________________________________________________________

1. தமிழகத்தில் மேலவை கலைக்கப்பட்டபோது:
மேலவைத் தலைவர் – ம.பொ.சிவஞானம்
தமிழக முதல்வர் – எம்.ஜி.ராமச்சந்திரன்
தமிழக ஆளுநர் – சுந்தர் லால் குரானா
இந்தியா ஜனாதிபதி – ஜெயில் சிங்
இந்திய பிரதமர் – ராஜிவ் காந்தி

2. தமிழ்நாட்டின் கண்பார்வையற்ற முதல் நீதிபதி - டி.டி.சக்கரவர்த்தி. இவர் கடந்த 2009, ஜுன் 1-ல், கோவை 3-ஆவது கூடுதல் முன்சீப் நீதிபதியாக பொறுப்பேற்றார்.

3. கொல்கத்தா, சென்னை, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு தனிச் சிறப்பு உண்டு. இந்த மூன்று நீதிமன்றங்கள் தான் “சார்ட்டர்டு ஐகோர்ட்டுகள்” என்று அழைக்கப்படுகின்றன.

4. சென்னை உயர்நீதிமன்றம் 1862-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போது ஒரு தலைமை நீதிபதி மற்றும் ஐந்து நீதிபதிகள் இருந்தனர். 1911-ஆம் ஆண்டு ஐகோர்ட்டுகள் சட்டம் இயற்றப்பட்ட பின் நீதிபதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆகும். இவர்களில் 42 நிரந்தர நீதிபதிகள், 18 கூடுதல் நீதிபதிகள் இருக்க வேண்டும். தற்போது வரை மொத்தம் 313 நீதிபதிகள் பதவியில் இருந்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி வகித்த 24 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றனர்.

5. சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீத்பதி டி.முத்துசாமி அய்யர் ஆவார்.

6. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டாக்டர். பி.வி.ராஜமன்னார், 13 ஆண்டுகள் (1948 முதல் 1961 வரை) இருந்துள்ளார்.

7. குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிட்த்தில் உள்ளது. 1956-ஆம் ஆண்டு பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த குடும்ப நல அறுவை சிகிச்சைத்திட்டம் துவக்கப்பட்டது.

8. 1986 ஆம் ஆண்டு டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக கருவுற்ற ஏழை தாய்மார்களுக்கு பேறுகாலத்திற்கு முன் இரண்டு மாதமும், பேறு காலத்திற்கு பின் இரண்டு மாதமும் பண உதவி அளிக்கப்படுகிறது.


__________________________________________________________________________

(COURTESY - SHANKAR TNPSC SPECIALIST)

No comments:

Post a Comment

ESIC - SSO 2018 RECRUITMENT

EMPLOYEE STATE INSURANCE CORPORATION RECRUITMENT OF SOCIAL SECURITY OFFICER / MANAGER GRADE-II / SUPERINTENDENT IN ESI CORPORATION ...