IRNSS

நாட்டின் முதல் "நேவிகேஷன்' செயற்கை கோள்: "இஸ்ரோ' புது சாதனை




கடல், வான் மற்றும் சாலை போக்குவரத்துக்கு உதவும் வகையில், "நேவிகேஷன்' செயற்கைக்கோளை உருவாக்கி, "இஸ்ரோ' நிறுவனம் சாதனை புரிந்துள்ளது.

"இஸ்ரோ' தயாரிப்பு:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, "இஸ்ரோ', நாட்டின் அனைத்து வகையான போக்குவரத்துக்கு உதவும் வகையில், ஏழு செயற்கைக்கோள்கள் கொண்ட அமைப்பை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.இந்த செயற்கைக்கோள்களின் மூலம், நாட்டின் உள்பகுதிகளிலும், எல்லையிலிருந்து, 1,500 கி.மீ., வரை, ஆகாயம், நீர், சாலை வழியில் பயணிக்கும் இடங்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில், கடல் மற்றும் விமான பயணத்திற்கு, "நேவிகேஷன்' செயற்கைக்கோள் பெரிதும்உதவியாக இருக்கும்.


"ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1ஏ' :
இந்த அமைப்பின், முதல்படியாக, "ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1ஏ' என்ற செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., சி-22 ராக்கெட் மூலம், ஜூன், 12ம் தேதியே விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால், ராக்கெட்டின் இரண்டாம் கட்டத்தில் உள்ள, "எலக்ட்ரோ - ஹைட்ரோலிக் கன்ட்ரோலில்' சிறிய பழுது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ராக்கெட்டை, விண்ணில் செலுத்தும் தேதியை, ஜூலை, 1ம் தேதிக்கு, "இஸ்ரோ' விஞ்ஞானிகள் தள்ளி வைத்தனர்.இந்த நிலையில், "பி.எஸ்.எல்.வி., சி-22' ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணிகளில், "இஸ்ரோ' தலைவர், ராதாகிருஷ்ணன் தலைமையிலான விஞ்ஞானி குழு மீண்டும் ஈடுபட்டது. ராக்கெட்டை ஏவுவதற்கான, 64:30 மணி நேர, "கவுன்ட்-டவுண்' ஜூன், 29ம் தேதி, காலை, 7:11 மணிக்கு துவங்கியது.



பி.எஸ்.எல்.வி., சி-22 :
இதை தொடர்ந்து, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின், முதல் ஏவுதளத்தில், பி.எஸ்.எல்.வி., சி-22 ராக்கெட் எரிபொருள் நிரப்பப்பட்டு, தயார் நிலையில் நிலை நிறுத்தப்பட்டது.முதல்கட்டமாக, இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக, 20,650 கி.மீ., தொலைவும், குறைந்தபட்சமாக, 284 கி.மீ., தொலைவும் உள்ள நீள்வட்டப் பாதையில், நிலை நிறுத்தப்படும். அதன் பின், புவி சுற்றுப்பாதைக்கு இணையாக நிலை நிறுத்தப்படும். தரைவழி, நீர்வழி மற்றும் வான்வழி என, போக்குவரத்துக்கு வழிகாட்டும் வகையில், இந்தியா சார்பில் செலுத்தப்படும் முதல் செயற்கைக்கோள் (நேவிகேஷன் சாட்டிலைட்) இது என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தம், 1,425 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.





No comments:

Post a Comment

ESIC - SSO 2018 RECRUITMENT

EMPLOYEE STATE INSURANCE CORPORATION RECRUITMENT OF SOCIAL SECURITY OFFICER / MANAGER GRADE-II / SUPERINTENDENT IN ESI CORPORATION ...