அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் திவாலானதாக அறிவிப்பு

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் திவாலானதாக அறிவிப்பு

அமெரிக்காவின், வாகன உற்பத்தி நகரமான டெட்ராய்ட், கடன் சுமை காரணமாக, திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை காணப்படுகிறது. ஐரோப்பாவில் கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகள், பொருளாதார சரிவில் சிக்குண்டு உள்ளன.பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடான அமெரிக்காவில், மிச்சிகன் மாகாணத்தில் உள்ள, டெட்ராய்ட் நகரம், கடன் சுமையால் திவாலாகி விட்டதாக, அம்மாநில முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன உற்பத்திஅமெரிக்காவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரங்களில், டெட்ராய்டும் ஒன்று. ஒரு காலத்தில் இங்கு, 20 லட்சம் மக்கள் வசித்தனர். பொருளாதார சரிவினால், தற்போது, 7 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கின்றனர்.பிரபலமான, "போர்டு' உள்ளிட்ட கார் தொழிற்சாலைகள், இந்த நகரத்தில் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இங்கு, கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வந்தது. தற்போது, டெட்ராய்ட் நகர நிர்வாகத்துக்கு, 1.08 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் உள்ளது.இந்த கடனை அடைக்க நிதி இல்லாத காரணத்தால், டெட்ராய்ட் நகரம் திவாலாகி விட்டதாக, மிச்சிகன் மாகாண முதல்வர், ரிக் சைடர் அறிவித்துள்ளார்.

மிச்சிகன் மாகாண அவசரகால மேலாண்மை அதிகாரி, கெவின் ஓர், இது குறித்து கூறியதாவது:டெட்ராய்ட் நகர வருவாயில், ஒவ்வொரு டாலருக்கும், 38 சதவீதம் கடன் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால், 2017ல், ஒவ்வொரு டாலர் வருவாய்க்கும், 65 சதவீதம் கடன் செலுத்த வேண்டிஇருக்கும்.38 சதவீதம்எனவே, நிலைமையை சமாளிக்க, திவால் அறிக்கை வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு கெவின் கூறினார்.
டெட்ராய்ட் நகரின் நிலைமையை, அதிபர் ஒபாமா, உன்னிப்பாக கவனித்து வருவதாக, வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

ESIC - SSO 2018 RECRUITMENT

EMPLOYEE STATE INSURANCE CORPORATION RECRUITMENT OF SOCIAL SECURITY OFFICER / MANAGER GRADE-II / SUPERINTENDENT IN ESI CORPORATION ...