தமிழகத்தின் அனல்மின் நிலையங்கள்

1. தமிழகத்தின் அனல்மின் நிலையங்கள்:
நெய்வேலி (கடலூர்)
மேட்டூர் (சேலம்)
எண்ணுர் (திருவள்ளூர்)
தூத்துக்குடி (தூத்துக்குடி)
ஜெயங்கொண்டான் (அரியலூர்)

2. தமிழகத்தின் அணுமின் நிலையங்கள்:
கல்பாக்கம் (காஞ்சிபுரம்)
கூடங்குளம் (திருநெல்வேலி)

3. இந்தியாவின் மிக நீண்டதூர ரயில் – விவேக் எக்ஸ்பிரஸ். இது உலகின் 8-ஆவது நீண்டதூர ரயில். இது தமிழகத்தின் கன்னியாகுமரி முதல் அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகர் வரையிலான 4287 கி.மீ. தூரத்தை 82.30 மணி நேரத்தில் கடக்கின்றது. சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் 2011-12 இரயில்வே பட்ஜெட்டில் அப்போதைய இரயில்வே அமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியால் அறிவிக்கப்பட்டது. இதற்குமுன் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவின் மிகநீண்ட தூர ரயிலாக இருந்தது.

4. பெரிய துறைமுகங்கள்:
சென்னை துறைமுகம்
எண்ணூர் துறைமுகம்
தூத்துக்குடி துறைமுகம்

5. நடுத்தர துறைமுகம்: நாகப்பட்டினம்

6. சிறிய துறைமுகங்கள்:
இராமேஸ்வரம்
கன்னியாகுமரி
கடலூர்
கொளச்சல்
காரைக்கால்
பாம்பன்
வாலிநொக்கம்

தமிழ்நாட்டின் முதன்மைகள்

தமிழ்நாட்டின் முதன்மைகள்:

1. மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர்
2. மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில், ஸ்ரீரங்கம்
3. மிகப் பெரிய தேர் – திருவாரூர் கோயில் தேர்
4. மிகப் பழமையான அணை – கல்லணை
5. மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13 கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை, முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை)
6. மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்)
7. மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்)

______________________________________________________________________________

தமிழ்நாட்டின் முதன்மைகள்:

1. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)
2. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)
3. தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்)
4. மிக உயரமான கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்
5. மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர்
6. மிக உயரமான அரசாங்க கட்டடம் – LIC சென்னை (14 மாடி)
7. மிக உயரமான சிலை – திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமாரி (133 அடி உயரம்)
8. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ)
9. மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934)
10. மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது)


______________________________________________________________________________

தமிழ்நாட்டின் முதன்மைகள்:

1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)
2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி
3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் – இராஜாஜி
4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)
5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)
6. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)
7. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி – சென்னை (1688)
8. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர்
9. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்
10. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்


______________________________________________________________________________

தமிழகத்தின் சிறப்புப் பெயர் பெற்ற இடங்கள்

தமிழகத்தின் சிறப்புப் பெயர் பெற்ற இடங்கள்:

1. தென்னிந்தியாவின் (கலாச்சார) நுழைவு வாயில் – சென்னை
2. தமிழ்நாட்டின் டெட்ராயிட் – சென்னை
3. தமிழ்நாட்டின் நுழைவு வாயில் – தூத்துக்குடி
4. தமிழ்நாட்டின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
5. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் – தஞ்சாவூர்
6. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல்
7. தமிழ்நாட்டின் ஹாலிவுட் – கோடம்பாக்கம்
8. தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான் – சிவகாசி
9. தமிழ்நாட்டின் புனித பூமி – இராமநாதபுரம்
10. தமிழ்நாட்டின் சமய நல்லிணக்க பூமி – நாகப்பட்டினம்

__________________________________________________________________

தமிழகத்தின் சிறப்புப் பெயர் பெற்ற இடங்கள்:

1. கீழை நாடுகளின் ‘ஸ்காட்லாந்து’ – திண்டுக்கல்
2. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் – கன்னியாகுமரி
3. இந்தியாவின் பின்னலாடை நகரம் – திருப்பூர்
4. தென்னிந்தியாவின் அணிகலன் – ஏற்காடு
5. புவியியலாளர்களின் சொர்க்கம் (Geologist Paradise) – சேலம்
6. போக்குவரத்து நகரம் – நாமக்கல் 
7. முட்டை நகரம் – நாமக்கல்
8. தொல்பொருளியலின் புதையல் நகரம் (Treasure Trove of Archeology) – புதுக்கோட்டை
9. அண்ட நடனத்தின் இருப்பிடம் (Seat of Cosmic Dance) – சிதம்பரம்

___________________________________________________________________




IRNSS

நாட்டின் முதல் "நேவிகேஷன்' செயற்கை கோள்: "இஸ்ரோ' புது சாதனை




கடல், வான் மற்றும் சாலை போக்குவரத்துக்கு உதவும் வகையில், "நேவிகேஷன்' செயற்கைக்கோளை உருவாக்கி, "இஸ்ரோ' நிறுவனம் சாதனை புரிந்துள்ளது.

"இஸ்ரோ' தயாரிப்பு:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, "இஸ்ரோ', நாட்டின் அனைத்து வகையான போக்குவரத்துக்கு உதவும் வகையில், ஏழு செயற்கைக்கோள்கள் கொண்ட அமைப்பை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.இந்த செயற்கைக்கோள்களின் மூலம், நாட்டின் உள்பகுதிகளிலும், எல்லையிலிருந்து, 1,500 கி.மீ., வரை, ஆகாயம், நீர், சாலை வழியில் பயணிக்கும் இடங்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில், கடல் மற்றும் விமான பயணத்திற்கு, "நேவிகேஷன்' செயற்கைக்கோள் பெரிதும்உதவியாக இருக்கும்.


"ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1ஏ' :
இந்த அமைப்பின், முதல்படியாக, "ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1ஏ' என்ற செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., சி-22 ராக்கெட் மூலம், ஜூன், 12ம் தேதியே விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால், ராக்கெட்டின் இரண்டாம் கட்டத்தில் உள்ள, "எலக்ட்ரோ - ஹைட்ரோலிக் கன்ட்ரோலில்' சிறிய பழுது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ராக்கெட்டை, விண்ணில் செலுத்தும் தேதியை, ஜூலை, 1ம் தேதிக்கு, "இஸ்ரோ' விஞ்ஞானிகள் தள்ளி வைத்தனர்.இந்த நிலையில், "பி.எஸ்.எல்.வி., சி-22' ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணிகளில், "இஸ்ரோ' தலைவர், ராதாகிருஷ்ணன் தலைமையிலான விஞ்ஞானி குழு மீண்டும் ஈடுபட்டது. ராக்கெட்டை ஏவுவதற்கான, 64:30 மணி நேர, "கவுன்ட்-டவுண்' ஜூன், 29ம் தேதி, காலை, 7:11 மணிக்கு துவங்கியது.



பி.எஸ்.எல்.வி., சி-22 :
இதை தொடர்ந்து, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின், முதல் ஏவுதளத்தில், பி.எஸ்.எல்.வி., சி-22 ராக்கெட் எரிபொருள் நிரப்பப்பட்டு, தயார் நிலையில் நிலை நிறுத்தப்பட்டது.முதல்கட்டமாக, இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக, 20,650 கி.மீ., தொலைவும், குறைந்தபட்சமாக, 284 கி.மீ., தொலைவும் உள்ள நீள்வட்டப் பாதையில், நிலை நிறுத்தப்படும். அதன் பின், புவி சுற்றுப்பாதைக்கு இணையாக நிலை நிறுத்தப்படும். தரைவழி, நீர்வழி மற்றும் வான்வழி என, போக்குவரத்துக்கு வழிகாட்டும் வகையில், இந்தியா சார்பில் செலுத்தப்படும் முதல் செயற்கைக்கோள் (நேவிகேஷன் சாட்டிலைட்) இது என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தம், 1,425 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.





TNPSC TITBITS

1. தேர்தல்களில் போட்டியிட குறைந்தபட்ச வயது வரம்பு:
மக்களவை தேர்தல் – 25
மாநிலங்களவை தேர்தல் – 30
சட்டப்பேரவை தேர்தல் – 25
சட்ட மேலவை தேர்தல் – 30
உள்ளாட்சி அமைப்பு தேர்தல் – 21
வாக்களுக்கும் வயது – 18

2. வேட்பாளரின் டெபாசிட் தொகை
பொது பிரிவினர்:
மாநில சட்டமன்ற தேர்தல் – ரூ.10,000/-
நாடாளுமன்ற தேர்தல் – ரூ.25,000/-
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்:
மாநில சட்டமன்ற தேர்தல் – ரூ.5,000/-
நாடாளுமன்ற தேர்தல் – ரூ.12,500/-

3. கிராமசபை கூடும் நாட்கள்:
குடியரசு தினம் – ஜனவரி 26
தொழிலாளர் தினம் – மே 1
சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15
காந்தி ஜெயந்த் – அக்டோபர் 2

4. தமிழ்நாட்டில் மொத்தம் 12,620 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

5. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 421 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

6. தமிழ்நாட்டில் அதிக கிராம பஞ்சாயத்துக்களைக் கொண்ட மாவட்டம் விழுப்புரம். இதில் 1104 கிராம பஞ்சாயத்துக்கள் அமைந்துள்ளன.

7. தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் கிராம பஞ்சாயத்துகளைப் பெற்றுள்ள மாவட்டம் நீலகிரி. இதில் 35 கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே உள்ளன.


_______________________________________________________________________

1. தமிழ்நாட்டில் முதல் முதலமைச்சர் – திரு. சுப்புராயலு ரெட்டியார்

2. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழக முதல்வராக இருந்தவர் – திரு. ஒமந்தூர் ராமசாமி ரெட்டியார்

3. சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் முடிந்த பிறகு தமிழக முதல்வரானவர் – திரு. இராஜாஜி

4. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன்

5. தமிழகத்தில் மிக நீண்டகாலம் (தொடர்ந்து) முதல்வராக இருந்தவர் – எம்.ஜி.ராமச்சந்திரன் (ஜூன் 30, 1977 முதல் டிசம்பர் 24, 1987 வரை – 10 ஆண்டுகள் 5 மாதங்கள் 25 நாட்கள்)

6. மிகக்குறுகிய காலம் முதல்வராக இருந்தவர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (ஜனவரி 17, 1988 முதல் ஜனவரி 30, 1988 வரை முதல்வராக இருந்தார் – 24 நாட்கள்)

7. தமிழகத்தில் மிக அதிகமுறை முதல்வர் பதவி வகித்தவர் – திரு. மு. கருணாநிதி (5 முறை)
10 பிப்ரவரி 1969 – 4 ஜனவரி 1971
15 மார்ச் 1971 – 31 ஜனவரி 1976
27 ஜனவரி 1989 – 30 ஜனவரி 1991
13 மே 1996 – 13 மே 2001
13 மே 2006 – 13 மே 2011


_______________________________________________________________________

1. தமிழகத்தின் முதல் கவர்னர் – ஜார்ஜ் மெக்கார்டினி
2. தமிழகத்தின் முதல் கவர்னர் – ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை (சுதந்திரத்திற்கு பிறகு)
3. தமிழகத்தின் முதல் இந்திய கவர்னர் – கிருஷ்ண கிமார சிங்ஜி பவசிங்ஜி
4. தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் – செல்வி. பாத்திமா பீவி
5. இந்தியா குடியரசு ஆனபோது தமிழக ஆளுநராக இருந்தவர் – கிருஷ்ண குமாரசிங்ஜி பவசிங்ஜி
6. இரண்டு முறை தமிழகத்தின் ஆளுநராக பதவி வகித்தவர் – சுர்ஜித்சிங் பர்னாலா
7. தமிழகத்தில் நீண்ட காலம் ஆளுநராக இருந்தவர் – சுர்ஜித்சிங் பர்னாலா (நவம்பர் 3, 2004 – ஆகஸ்ட் 31, 2011, சுமார் 6 ½ ஆண்டுகள்)
8. தமிழகத்தின் குறுகிய காலம் ஆளுநராக இருந்தவர் – எம்.எம்.இஸ்மாயில் (அக்டோபர் 27, 1980 முதல் நவம்பர் 4, 1980 வரை, 9 நாட்கள் தற்காலிக ஆளுநர்)


_____________________________________________________________________

முக்கிய தலைவர்களின் பிறப்பிடம்:

1. புலித்தேவன் – நெற்கட்டும் செவ்வல்
2. யூசுப்கான் (மருதநாயகம்) – பனையூர் (இராமநாதபுரம்)
3. வீரபாண்டிய கட்டபொம்மன் – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி)
4. ஊமைத்துரை – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி)
5. மருது சகோதரர்கள் – முக்குளம் (அருப்புக்கோட்டை)
6. தீரன் சின்னமலை – மேலப்பாளையம் (ஈரோடு)
7. வேலுநாய்ச்சியார் – சிவகங்கை
8. பாண்டித்துரை தேவர் – இராமநாதபுரம்
9. வாஞ்சிநாதன் – செங்கோட்டை
10. சுப்பிரமணிய பாரதியார் – எட்டயபுரம் (தூத்துக்குடி)
11. சுப்பிரமணியசிவா – வத்தலகுண்டு (திண்டுக்கல்)
12. வ.வே.சு.ஐயர் – வரகனேரி (திருச்சி)
13. திருப்பூர் குமரன் – சென்னிமலை (அவினாசி)
14. செண்பகராமன் பிள்ளை – திருவனந்தபுரம்
15. தில்லையாடி வள்ளியம்மை – ஜோகன்னஸ்பெர்க் (தென்னாப்பிரிக்கா)
16. இராஜாஜி – தொரப்பள்ளி (கிருஷ்ணகிரி)
17. வ.உ.சிதம்பரனார் – ஒட்டப்பிடரம் (திருநெல்வேலி)
18. விஜயராகவாச்சாரியார் – சேலம்
19. ஈ.வெ.இராமசாமி நாயக்கர் – ஈரோடு
20. சத்தியமூர்த்தி – திருமயம் (புதுக்கோட்டை)
21. திரு.வி.க – துள்ளம் (திருவள்ளூர்)
22. முத்துராமலிங்க தேவர் – பசும்பொன் (இராமநாதபுரம்)
23. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – தேரூர் (கன்னியாகுமரி)
24. வெ.ராமலிங்கம் பிள்ளை – மோகனூர் (நாமக்கல்)
25. பாரதிதாசன் – பாண்டிச்சேரி
26. கு.காமராஜர் – விருதுநகர்
27. சி.என்.அண்ணாதுரை – காஞ்சிபுரம்
28. மு.கருணாநிதி – திருக்குவளை (திருவாரூர்)
29. எம்.ஜி.ஆர் – நாவலப்பிட்டி (கண்டி – இலங்கை)
30. ஜெ.ஜெயலலிதா – மேல்கோட்டை (கர்நாடகா)
31. அப்துல் கலாம் – இராமேஸ்வரம்
32. நேசமணி – கன்னியாகுமரி
33. ஜீவா – கன்னியாகுமரி
34. ம.பொ.சிவஞானம் – சென்னை
35. எம்.எஸ்.சுவாமிநாதன் – கும்பகோணம்


_________________________________________________________________

தமிழக தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்:

1. இராஜகோபாலாச்சாரி – மூதறிஞர், இராஜாஜி.
2. ஈ.வெ.ராமசாமி – தந்தை பெரியார், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், சுயமரியாதைச் சுடர்.
3. வ.உ.சிதம்பரனார் – வ.உ.சி. கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டு திலகர், செக்கிழுத்த செம்மல்.
4. காமராஜர் – படிக்காத மேதை, கறுப்பு காந்தி, கர்ம வீரர், கல்வி கண் திறந்தவர், கிங் மேக்கர்.
5. அண்ணாதுரை – அறிஞர் அண்ணா, பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா, தென்னாட்டு காந்தி.
6. உ.வே.சுவாமிநாத ஐயர் – தமிழ் தாத்தா.
7. திரு.வி.க – தமிழ் தென்றல்
8. சுப்பிரமணிய பாரதியார் – மகாகவி, தேசிய கவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக் கவி.
9. பாரதிதாசன் – பாவேந்தர், புரட்சிக்கவிஞர், புதுமைக் கவிஞர்.
10. கல்கி – தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், வரலாற்று நாவல் தந்தை.
11. வாணிதாசன் – தமிழ்நாட்டின் வெர்ட்ஸ் வெர்த்.
12. ஜெயகாந்தன் – தமிழ்நாட்டின் மாப்ஸான்.
13. புதுமைப்பித்தன் – சிறுகதை மன்னன்.
14. மு.வரதராசன் – மு.வ.தமிழ்நாட்டு பெர்னாட்ஷா.
15. கி.ஆ.பெ.விஸ்வநாதம் – முத்தமிழ் காவலர்
16. அண்ணாமலைச் செட்டியார் – தனித்தமிழ் இசைக் காவலர்.
17. ம.பொ. சிவஞானம் – ம.பொ.சி., சிலம்புச் செல்வர்.
18. தேசிக விநாயகம் பிள்ளை – கவிமணி.
19. இராமலிங்கம் பிள்ளை – நாமக்கல் கவிஞர், காந்தியக் கவிஞர், ஆஸ்தான கவிஞர்.
20. இரா.பி.சேதுப்பிள்ளை – சொல்லின் செல்வர் (இலக்கியத்தில்).
21. ஈ.வெ.கி.சம்பத் – சொல்லின் செல்வர் (அரசியலில்).
22. அழ.வள்ளியப்பா – குழந்தை கவிஞர்.
23. சிங்கால வேலர் – மே தினம் கண்டவர்.
24. பம்மல் சம்பந்த முதலியார் – தமிழ் நாடகத் தந்தை.
25. சங்கரதாஸ் சுவாமிகள் – தமிழ்நாடகத் தலைமையாசிரியர்.
26. எம்.எஸ்.சுப்புலட்சுமி – இசைக் குயில்.
27. கருணாநிதி – கலைஞர்.
28. எம்.ஜி.ராமச்சந்திரன் – எம்.ஜி.ஆர்., மக்கள் திலகம்.
29. செல்வி. ஜெயலலிதா – புரட்சித் தலைவி.
30. சிவாஜி கணேசன் – நட்கர் திலகம்.
31. எம்.எஸ்.சுவாமிநாதன் – இந்திய பசுமப்புரட்சியின் தந்தை.


_____________________________________________________________

நன்றி - https://www.facebook.com/shankar.coimbatore

IMPORTANT ABBREVIATIONS

Abbreviations

EIU – Economist Intelligence Unit
CBS – Central Bureau of Statistics
VSSC – Vikram Sarabhai Space Centre
LPSC – Liquid Propulsion Systems Centre
CEET – Centre for Energy – Efficient Telecommunications
WEF – World Economic Forum
PBD – Pravasi Bharatiya Divas
PLO – Palestine Liberation Organisation
TERC – Trade and Economic Relations Committee
TWAS – Third World Academy of Sciences
WCCB – Wildlife Crime Control Bureau
WWW – World Wide Web
NTPC – National Thermal Power Corporation
ISB – Indian Standard Bureau
INS – Indian Naval Ship

TNPSC TITBITS

உலக மகளிர் மாநாடு:

1. முதலாவது உலக பெண்கள் மாநாடு 1975-ஆம் ஆண்டு பெக்சிகோ நகரில் நடைபெற்றது.

2. இரண்டாவது உலக மகளிர் மாநாடு 1980-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டிலுள்ள கோபென்ஹேகன் நகரில் நடைபெற்றது.

3. மூன்றாவது உலக மகளிர் மாநாடு 1985-ஆம் ஆண்டு கென்யாவிலுள்ள நைரோபியில் நடைபெற்றது.

4. 1995-ஆம் ஆண்டு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நான்காவது உலக மகளிர் மாநாடு நடைபெற்றது.

5. ஐந்தாவது உலக மகளிர் மாநாடு 2015-இல் நடைபெறவுள்ளது.

6. மார்ச் 8 – சர்வதேச பெண்கள் தினம்.

7. 1978 – சர்வதேச பெண்கள் ஆண்டு (ஐ.நா.சபை)



________________________________________________________________

1. தமிழகத்தில் மேலவை கலைக்கப்பட்டபோது:
மேலவைத் தலைவர் – ம.பொ.சிவஞானம்
தமிழக முதல்வர் – எம்.ஜி.ராமச்சந்திரன்
தமிழக ஆளுநர் – சுந்தர் லால் குரானா
இந்தியா ஜனாதிபதி – ஜெயில் சிங்
இந்திய பிரதமர் – ராஜிவ் காந்தி

2. தமிழ்நாட்டின் கண்பார்வையற்ற முதல் நீதிபதி - டி.டி.சக்கரவர்த்தி. இவர் கடந்த 2009, ஜுன் 1-ல், கோவை 3-ஆவது கூடுதல் முன்சீப் நீதிபதியாக பொறுப்பேற்றார்.

3. கொல்கத்தா, சென்னை, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு தனிச் சிறப்பு உண்டு. இந்த மூன்று நீதிமன்றங்கள் தான் “சார்ட்டர்டு ஐகோர்ட்டுகள்” என்று அழைக்கப்படுகின்றன.

4. சென்னை உயர்நீதிமன்றம் 1862-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போது ஒரு தலைமை நீதிபதி மற்றும் ஐந்து நீதிபதிகள் இருந்தனர். 1911-ஆம் ஆண்டு ஐகோர்ட்டுகள் சட்டம் இயற்றப்பட்ட பின் நீதிபதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆகும். இவர்களில் 42 நிரந்தர நீதிபதிகள், 18 கூடுதல் நீதிபதிகள் இருக்க வேண்டும். தற்போது வரை மொத்தம் 313 நீதிபதிகள் பதவியில் இருந்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி வகித்த 24 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றனர்.

5. சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீத்பதி டி.முத்துசாமி அய்யர் ஆவார்.

6. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டாக்டர். பி.வி.ராஜமன்னார், 13 ஆண்டுகள் (1948 முதல் 1961 வரை) இருந்துள்ளார்.

7. குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிட்த்தில் உள்ளது. 1956-ஆம் ஆண்டு பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த குடும்ப நல அறுவை சிகிச்சைத்திட்டம் துவக்கப்பட்டது.

8. 1986 ஆம் ஆண்டு டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக கருவுற்ற ஏழை தாய்மார்களுக்கு பேறுகாலத்திற்கு முன் இரண்டு மாதமும், பேறு காலத்திற்கு பின் இரண்டு மாதமும் பண உதவி அளிக்கப்படுகிறது.


__________________________________________________________________________

(COURTESY - SHANKAR TNPSC SPECIALIST)

ESIC - SSO 2018 RECRUITMENT

EMPLOYEE STATE INSURANCE CORPORATION RECRUITMENT OF SOCIAL SECURITY OFFICER / MANAGER GRADE-II / SUPERINTENDENT IN ESI CORPORATION ...