TNPSC Training

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் "குரூப் 4' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும்,"குரூப் 4' தேர்வில் பங்கேற்பவர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இலவச சிறப்பு பயிற்சி அளிக்கிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கு மனுச்செய்துள்ள மனுதாரர்களுக்கு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக, தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்க விருப்பமுள்ள நபர்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரம் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோக்களுடன் ஜூலை 19ம் தேதிக்குள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
பயிற்சி வகுப்பு ஜூலை 22 முதல் ஆக., 7 வரை மாலை 3.00 மணி முதல் 6,00 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகுதியான மனுதாரர்கள் இப்பயிற்சியில் பங்கேற்று பயனடையலாம் என்று கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

TNPSC - தமிழக பழங்குடி மக்களின் வாழிடங்கள்

தமிழக பழங்குடி மக்களின் வாழிடங்கள்:

1. தோடர்கள் – நீலகிரி மலைப்பகுதி
2. கோட்டர்கள் – நீலகிரி மலைப்பகுதி
3. குரும்பர்கள் – நீலகிரி மலைப்பகுதி மற்றும் சமவெளிகள்
4. இருளர்கள் – தமிழ்நாட்டின் சமவெளிப்பகுதிகளில் பரவலாக காணப்படுகின்றனர்.
5. மலையாளிகள் – ஜவ்வாது மலை, பச்சை மலை, ஏற்காடு மற்றும் கொல்லி மலைப் பகுதிகள்
6. பனியர்கள் – நீலகிரி
7. முதுவர்கள் – கோயம்புத்தூர், மதுரை
8. அரநாடன் – ஆனைமலைப் பகுதிகள் (கோவை)
9. எரவல்லவன் – கோவைப் பகுதிகள்
10. மலவேடன் – மதுரை, திண்டுக்கல் (கொடைக்கானல் மலை)

TNPSC Titbits

1. பொன்னியின் செல்வன் என்ற புதினத்தை எழுதியவர்?
2. சுப்பிரமணிய பாரதியார் பிறந்த மாவட்டம்?
3. பயோ கேஸில் எந்த வாயு அதிகமாக இருக்கிறது?
4. பாலில் காணப்படும் குளுக்கோஸ்?
5. விளையாட்டு வீரர்களுக்கு உடனடியாக சக்தி தருவது?
6. மாண்டேகு, செம்ஸ்போர்டு (1919) சீர்திருத்தங்களின் முக்கிய அம்சம்?
7. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர்?
8. சந்திரபிரபா வனவிலங்கு சரணாலயம் உள்ள மாநிலம்?
9. போரை பிரகடனப்படுத்த சட்டப்பூர்வமான அதிகாரத்தை பெற்றிருப்பவர்?
10. இந்தியாவில் நிலக்கரி முதன்முதலாக தோண்டி எடுக்கப்பட்ட ஆண்டு?

____________________________________________________________________
1. தமிழகத்தின் முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)

2. தமிழகத்தின் முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882)

3. கர்நாடக இசை மேதைகள் பிறந்த இடம்:
சியாமா சாஸ்திரிகள் (1762-1827) – திருவாரூர்
தியாகராஜ சுவாமிகள் (1767-1847) – திருவாரூர்
முத்துசுவாமி தீட்சிதர் (1775-1834) – திருவாரூர்

4. திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் விருதுகள் (அரசு விருப்புரிமையின் அடிப்படையில்):
அண்ணா விருது – சிறந்த வசனகர்த்தாவுக்கு
கலைவாணர் விருது – சிறந்த நகைச்சுவை நடிகருக்கு
ராஜா சாண்டோ விருது – சிறந்த இயக்குநருக்கு
கவிஞர் கண்ணதாசன் விருது – சிறந்த பாடலாசிரியருக்கு
நடிகர் திலகம் சிவாஜி விருது – சிறந்த நடிகருக்கு
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். விருது – சிறந்த நடிகருக்கு
தியாகராஜ பாகவதர் விருது – சிறந்த இசையமைப்பாளருக்கு

5. முக்கிய நதிகளும் அவற்றின் நீளங்களும்:
காவேரி – 760 கி.மீ
தென்பெண்ணை – 396 கி.மீ
பாலாறு – 348 கி.மீ
வைகை – 258 கி.மீ
பவானி – 210 கி.மீ
தாமிரபரணி – 130 கி.மீ


________________________________________________________________________





TNPSC MCQ2

1. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதியிழப்பு தொடர்பான கேள்விகள் கீழ்வரும் யாரால் தீர்மானிக்கப்படுகிறது?
a) தேர்தல் ஆணையம் (லோக் சபாவில்) 
b) தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையுடன் சம்பந்தப்பட்ட சபையின் சபாநாயகர் 
c) தேர்தல் ஆணையத்தின் கருத்துரைப்படி ஜனாதிபதி 
d) உச்ச நீதிமன்றம்

Questions of disqualification of member of the Parliament have to be decided by 
a) The Election Commission, in Lok Sabha 
b) The Speaker or the Chairman of the respective House in consultation with the Election Commission
c) The President, according to the opinion of the Election commission
d) The Supreme Court

2. கீழ்வரும் எந்த தருணங்களில், நாடாளுமன்றம் மாநிலப் பட்டியலில் உள்ள விஷயங்களில் சட்டமியற்ற முடியும்?
a) குடியரசுத் தலைவர் அவ்வாறு செய்யும்படி உத்தரவு விறப்பித்தால்
b) உச்சநீதிமன்றம் இதற்கான அதிகாரத்தை நாடாளுமன்றத்திடம் வழங்கினால்
c) தேசிய நலன் கருதி, நாலாளுமன்றம் மாநிலப்பட்டியல் விஷயங்களில் சட்டமியற்ற வேண்டுமென்று ராஜ்ய சபாவின் இரண்டில் மூன்று பங்கு (வருகை புரிந்ததில் 2/3 பங்கு) உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி வாக்களிக்க வேண்டும்.
d) பிரதமர் சிறப்பாணை பிறப்பிக்கும் போது

The Parliament can legislate on the subjects in the State List if the
a) President issues on order authorizing it to do so
b) Supreme Court gives authority to the Parliament in this regard
c) Rajya Sabha passes a resolution by two-third of its members present and voting, declaring it expedient to legislate on a state matter in the national interest.
d) Prime Minister issues a special order.

3. கீழ்வருபவர்களில் யாரைப் பணிநீக்கம் செய்வதற்கு, நாடாஅளுமன்றாம் அதிகாரம் பெற்றுள்ளது?
a) அரசாங்கப் பொதுத் தணிக்கையாளர்
b) உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
c) UPSCன் தலைவர்
d) உயர்நீதிமன்ற நீதிபதிகள்

Parliament is empowered to get the following removal
a) Comptroller and Auditor General
b) Supreme Court judges
c) Chairman of UPSC
d) High Court Judges

4. கீழ்வருபவைகளில், இந்திய நாடாளுமன்றாத்தின் பணிகள் யாவை?
a) கேபினெட் உருவாக்கி, அதைப் பொறுப்பில் வைத்திருத்தல்
b) அரசாங்கக் கொள்கைகளை நுண்ணாய்ந்து பகுத்தல்
c) குறையுள்ளோர் குறை தீர்த்தல்
d) அரசாங்கம் தொடர்பான தகவல்களைச் சேகரித்தல்

Which of the following are a function of Parliament in India?
a) Providing the Cabinet and holding them responsible
b) Critically analyzing government policy
c) Grievance ventilation
d) Securing relevant information on government

5. நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டசபையின் சட்டமியற்றக்கூடிய அதிகாரங்கள் எவ்வாறு சோதனைப் படுத்தப்படுகிறது?
a) ஜனாத்பதி/ஆளுநரின் தலையீட்டால்
b) நம்பிக்கையில்லாத் தீர்மானங்களால்
c) நீதிமுறை மேலாய்வு
d) பொதுத் தேர்தல்களால்

How are legislative excess of Parliament and State Assemblies Checked?
a) Intervention from President/Governer
b) No-confidence motions
c) Judicial review
d) General elections

TNPSC MCQ-1

1. கீழ்வரும் நாடாளுமன்ற உறுப்பினரல்லாதவர்களில் யாருக்கு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த உரிமை உண்டு?
a) இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்
b) நடுவண் அரசுத் தலைமை வழக்குரைஞர்
c) இந்திய தலைமை நீதிபதி
d) தலைமைத் தேர்தல் ஆணையர்

Which of the following non-member of Parliament has the Right to Address it?
a) Attorney General of India
b) Solicitor General of India
c) Chief Justice of India
d) Chief Election Commissioner

2. நாடாளுமன்றம் மொத்த நாட்டிற்கோ அல்லது இந்தியாவின் சில பகுதிகளுக்கோ சர்வதேச உடன்படிக்கைகளை நிறைவேற்றுவதற்காக எந்த சட்டமியற்ற முடியும்?
a) அனைத்து மாநிலங்களின் ஒப்புதலின் படி
b) பெரும்பாண்மை மாநிலங்களின் ஒப்புதலின் படி
c) சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலின் படி
d) எந்த மாநிலத்தின் ஒப்புதல் இன்றியும்

The Parliament can make any law for the whole or any part of India for Implementing International treaties.
a) With the consent of all the State
b) With the consent of the majority of States
c) With the consent of the States concerned
d) Without the consent of any State

3. ராஜ்ய சபா எந்த விஷயங்களில் லோக் சபாவை விட அதிகமான அதிகாரங்கள் பெற்றுள்ளது?
a) பண மசோதாக்கள்
b) பண மசோதா அல்லாதவைகளில்
c) புதிய அனைத்திந்திய குடிமைப் பணி உருவாக்கம்
d) இவற்றில் எதுவுமில்லை

Rajya Sabha enjoys more power than the Lok Sabha in the case of
a) Money Bills
b) Non money Bills
c) Setting up of new All India Services
d) None of the above

4. கீழ்வரும் கூற்றுகளை ஆய்க.
a) அரசியலைமைப்பின் ஷரத் – 108ன் படி, கூட்டமர்வு நடத்தப்படுகிறது.
b) லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவின் முதல் கூட்டமர்வு 1961-ல் நடத்தப்பட்டது.
c) இரண்டாவது கூட்டமர்வு, வங்கியியல் சேவைக் குழு மசோதாவை நிறைவேற்றுவதற்காக நடத்தப்பட்டது.

Consider the following Statements:
a) The joint sitting of the two Houses of the Parliament in India is sanctioned under Article-108 of the Constitution.
b) The first joint sitting of Lok Sabha and Rajya Sabha was held in the year 1961.
c) The second joint sitting of Lok Sabha and Rajya Sabha was held to pass the Banking Services Commission (Repeal) Bill

5. கீழ்வரும் வாக்கியங்களுள் எது சரியானது
a) ஒருவர் 26, ஜனவரி 1951ல் ரங்கூனில் பிறந்து, அவர் பிறந்த போது அவர் தந்தை இந்தியக் குடிமகனாக இருந்தால் அவர் மரபு வழிக் குடியுரிமை (இந்தியாவில்) பெற முடியும்.
b) ஒருவர் 1 ஜூலை 1988ல் இடாநகரில் பிறந்து அவர் பிறந்த போது அவர் தாய் மட்டும் இந்தியக் குடியுரிமை பெற்றிருந்தால் (தந்தை இந்தியக்குடிமகன் இல்லை) அவர் இந்தியாவில் பிறப்புக் குடியுரிமை பெற முடியும்.

Consider the following statements:
a) A person who was born on 26th January, 1951 in Rangoon, whose father was a citizen of India by birth at the time of his birth, is deemed to be an Indian citizen by descent.
b) A person who was born on 1st July, 1988 in Itangar, whose mother is a citizen of India at the time of his birth but the father was not, is deemed to be a citizen of India by birth.

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் திவாலானதாக அறிவிப்பு

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் திவாலானதாக அறிவிப்பு

அமெரிக்காவின், வாகன உற்பத்தி நகரமான டெட்ராய்ட், கடன் சுமை காரணமாக, திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை காணப்படுகிறது. ஐரோப்பாவில் கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகள், பொருளாதார சரிவில் சிக்குண்டு உள்ளன.பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடான அமெரிக்காவில், மிச்சிகன் மாகாணத்தில் உள்ள, டெட்ராய்ட் நகரம், கடன் சுமையால் திவாலாகி விட்டதாக, அம்மாநில முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன உற்பத்திஅமெரிக்காவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரங்களில், டெட்ராய்டும் ஒன்று. ஒரு காலத்தில் இங்கு, 20 லட்சம் மக்கள் வசித்தனர். பொருளாதார சரிவினால், தற்போது, 7 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கின்றனர்.பிரபலமான, "போர்டு' உள்ளிட்ட கார் தொழிற்சாலைகள், இந்த நகரத்தில் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இங்கு, கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வந்தது. தற்போது, டெட்ராய்ட் நகர நிர்வாகத்துக்கு, 1.08 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் உள்ளது.இந்த கடனை அடைக்க நிதி இல்லாத காரணத்தால், டெட்ராய்ட் நகரம் திவாலாகி விட்டதாக, மிச்சிகன் மாகாண முதல்வர், ரிக் சைடர் அறிவித்துள்ளார்.

மிச்சிகன் மாகாண அவசரகால மேலாண்மை அதிகாரி, கெவின் ஓர், இது குறித்து கூறியதாவது:டெட்ராய்ட் நகர வருவாயில், ஒவ்வொரு டாலருக்கும், 38 சதவீதம் கடன் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால், 2017ல், ஒவ்வொரு டாலர் வருவாய்க்கும், 65 சதவீதம் கடன் செலுத்த வேண்டிஇருக்கும்.38 சதவீதம்எனவே, நிலைமையை சமாளிக்க, திவால் அறிக்கை வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு கெவின் கூறினார்.
டெட்ராய்ட் நகரின் நிலைமையை, அதிபர் ஒபாமா, உன்னிப்பாக கவனித்து வருவதாக, வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.

IMPORTANT SUMMITS HELD ON 2012-13

BRICS (Brazil, Russia, India, China and South Africa) Summits

• 4th BRICS Summit 2012 – New Delhi, India
• 5th BRICS Summit 2013 – Durban, South Africa

G-8 Annual Summits Group of Eight (G8) Countries – France, Germany, Italy, Japan, United Kingdom, United States of America, Canada, Russia.

• 37th G8 Meeting 2011 – Deauville, France
• 38th G8 Meeting 2012 – David camp, USA
• 39th G8 Summit 2013 – County Fermanagh, UK
• 40th G8 Summit 2014 – Russia

G-20 Summits

• 7th G 20 Meeting 2012 – Los Cabos, Mexico
• 8th G 20 Meeting 2013 – Saint Petersburg, Russia
• 9th G 20 Meeting 2014 – Brisbane, Australia

SAARC Summits SAARC – South Asian Association for Regional Cooperation

• 17th SAARC Summit 2011– Addu, Maldives
• 18th SAARC Summit 2013 – Kathmandu,Nepal

ASEAN Summits ASEAN – Association of South East Asian Nation

• 19th ASEAN Summit 2011 (November) – Bali, Indonesia
• 20th ASEAN Summit 2012 (April)– Phnom penh, Cambodia
• 21th ASEAN Summit 2012 (November)– Phnom penh, Cambodia

ASEAN-India Summit

• 9th ASEAN-India Summit 2011 – Bali, Indonesia
• 10th ASEAN-India Summit 2012 – Phnom penh, Cambodia

East Asia Summit (EAS) EAS meetings are held after annual ASEAN leaders’ meetings.

• 6th East Asia Summit 2011 – Bali, Indonesia
• 7th East Asia Summit 2012 – Phnom penh, Cambodia

IBSA Summits IBSA Dialogue Forum - India, Brazil, South Africa.

• 5th IBSA Summit 2011 – Pretoria, South Africa
• 6th IBSA Summit 2013 – India

APEC Summits APEC – Asia Pacific Economic Cooperation

• 23rd APEC summit 2011 – Honolulu, USA
• 24th APEC Summit 2012 – Vladivostok,Russia
• 25th APEC Summit 2013 – Medan/Jakarta, Indonesia
• 26th APEC Summit 2014 – China
• 27th APEC Summit 2015 – Philippines
• 28th APEC Summit 2016 – Lima, Peru

OPEC Seminars OPEC – Organization of Petroleum Exporting Countries

• 4th OPEC International Seminar 2009 – Vienna, Austria
• 5th OPEC International Seminar 2012 – Vienna, Austria

NAM Summits NAM – Non-aligned Movement

• 16th NAM Summit 2012 – Tehran, Iran
• 17th NAM Summit 2015 – Caracas,Venezuela

SCO Meetings SCO – Shanghai Cooperation Organization

• SCO Meeting 2011 – Astana, Kazakhstan
• SCO Meeting 2012 – Beijing, China
• SCO Meeting 2013 – Kyrgyzstan

NATO (North Atlantic treaty organization) international conference on Afghanistan will be held in Chicago (USA)

Asian Development Bank (ADB) Annual Meetings Annual meeting of the board of governors of the Asian Development Bank (ADB) held every year.

• ADB Annual Meeting 2012 – Manila, Philippines
• ADB Annual Meeting 2013 – New Delhi, India

WTO Ministerial Conferences
• 8th WTO Ministerial Conferences2011 – Geneva, Switzerland
• 9th WTO Ministerial Conferences2013 (Expected) -Bali, Indonesia

ESIC - SSO 2018 RECRUITMENT

EMPLOYEE STATE INSURANCE CORPORATION RECRUITMENT OF SOCIAL SECURITY OFFICER / MANAGER GRADE-II / SUPERINTENDENT IN ESI CORPORATION ...